Friday 30 November 2012

THUPPAKKI - A "VIJAY RETURNS"


துப்பாக்கி  திரை விமர்சனம்

                                          துப்பாக்கி , ஒரு தீபாவளி ஸ்பெஷல் செல்லுலாய்ட்  சரவெடி. ஸ்லீப்பர் ஸெல்  தலைவனை அழிக்க போராடும் இராணுவ வீரனின் கதை .
                             கில்லி, போக்கிரிக்கு பிறகு ரொம்ப நாளைக்கு அப்புறம் விஜய் இரசிகர்களை காலர் தூக்கி விட செய்யும் படம் .
                              விடுமுறைக்கு வீட்டிற்கு வரும் விஜய் எதேச்சையாக ஒரு தீவிரவாதியை பிடிக்கிறார் . அவனை விசாரிக்கும் போது , தீவிரவாதிகளின் சதித்திட்டத்தை அறிந்து கொள்கிறார் . அந்த திட்டங்களை எப்படி முறியடிக்கிறார் என்பது மீதி கதை .
                               எவ்வளவு பெரிய ஹீரோ நடித்தாலும் படத்தின் முதல் ஹீரோ திரைக்கதை தான் என்பதை நிரூபித்திருக்கிறார் ஏ . ஆர் . முருகதாஸ் . டைட்டில் கார்டு முதல் எண்டு கார்டு வரை ஒவ்வொரு பிரேமிலும் முருகதாஸின் உழைப்பு தெரிகிறது. எக்ஸ்பிரஸ் வேக எண்டர்டெயின்மென்ட் திரைக்கதையில் எமோஷனல் மெசேஜ் சொல்லி கதாபாத்திர தேர்வு முதல் டெக்னிக்கல் கலக்கல் வரை சந்தேகமே இல்லாமல் தான் இந்தியாவின் முன்னணி கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர் என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார் .
                               அத்லெடிக் , ஜிம்னாஸ்டிக் சாகசங்கள் , பஞ்ச் டயலாக்ஸ் , ஆக்ஷன் பில்டப்புகள், நெஞ்சை பிழியும் (!?) லேடீஸ் சென்டிமென்ட் எதுவும் இல்லாத ஜாலி கேலி விஜயை பார்த்து எவ்வளவு நாளாச்சு . கெத்தான  இராணுவ வீரனாகவும் ரொமான்டிக் காதலனாகவும் பட்டையை கிளப்பி இருக்கிறார் . குஷி, சச்சினின் குறும்பும் போக்கிரி , கில்லி ஹீரோயிசமும் கலந்து "ஐயம் பேக்" என்று அஜீத் டயலாக்கை சொல்லாமல் சொல்லி இருக்கிறார் விஜய் . இதே டெம்போவை தொடர்ந்தால் அவருக்கும் நல்லது , அவரது ரசிகர்களுக்கும் நல்லது .
                               காஜல் . . . கதைக்கும் அவருக்கும் பெரிய சம்பந்தம் இல்லையென்றாலும் முழு படத்திலும் நூல் பிடித்ததை போல் தொடரும் பாத்திரப்படைப்பினால் மனதை ஈர்க்கிறார் . காஜல் காதல் ஸெக்மென்டுகல் அதிவேக திரைக்கதைக்கு ஸ்பீடு பிரேக்கர்களாக இல்லாமல் "refreshment"ஆக அமைந்தது இயக்குனரின் புத்திசாலித்தனம் . ஆனா, ஏனோ தெரியல சமீப காலமாக பொண்ணுங்க தண்ணி அடிக்கிறதை ரொம்ப சாதாரணமா காட்டுராங்கபா .
                               ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் எல்லாம் "வழக்கம் போல" ரகமாக இருந்தாலும் பின்னணி இசையில் பிச்சு உதறுகிறார் . விஜய் குரலுக்காக "கூகுள் கூகுள்" ம் , படமாக்கப்பட்ட விதத்திற்காக "அண்டார்ட்டிக்கா"வும் கவனம் ஈர்க்கிறது .
                                ஆக்ஷன் படங்களில் , ஹீரோ பில்டப் ஏற்ற படங்களில் , லோ ஆங்கிளில் கேமரா சுழற்றும் கேமராமேன்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம் இது . நடிகர் , நடிகைகளின் இமேஜையும் , படத்தின் பட்ஜெட்டையும் மனதில் கொள்ளாமல் காட்சியின் தன்மைக்கு ஏற்ப கோணம், ஒளி அமைப்பு , கலர் டோன் என ஒளிப்பதிவிற்கு இலக்கணம் வகுத்திருக்கிறார் சந்தோஷ் சிவன் . பி. சி. சார் சொன்ன மாதிரி  கண்டிப்பா நீங்க இந்திய ஒளிப்பதிவாளர்களின் பெருமை தானுங்க சேட்டா ...
                                 திரைக்கதையின் இவ்வளவு ட்விஸ்டுகளையும் துளி குழப்பமும் இல்லாமல் சாதாரண ரசிகர்களையும் ரசிக்க வைத்தது  ஸ்ரீகர் பிரசாத்தின் வெற்றி . இன்ட்ரவல் ப்ளாக்கிற்கு முன்பு வரும் பத்து நிமிடங்களுக்குள் பன்னிரண்டு டிராக்குகளை கச்சிதமாகவும் எளிமையாகவும் வெட்டி ஒட்டியிருப்பது , ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் .
                                பிரம்மிக்க வைக்கும் சண்டை காட்சிகளுக்கு ஒரு சபாஷ் . க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் முற்றிலும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் விஜய் துப்பாக்கியை கைப்பற்றுவது ... சூப்பரப்பு .
                                சத்யனுக்கு இது செம லக்கி  சினிமா . காமெடி ஆனாலும் சீரியஸ் ஆனாலும் கிடைத்த வாய்ப்பை நன்றாக நன்றாக பயன்படுத்தி இருக்கிறார் .
                                 எண்பது ஆண்டு கால சினிமா வரலாற்றில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஹீரோவை விட புத்திசாலியான வில்லன்களில் ஒருவர் வித்யுத் ஜமால் . ஹை டெசிபல் சவுண்டில் சவால் விடுவது , புள்ளப்பூச்சியை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து பட்டாசு அபிஷேகம் செய்வது , முதுகில் அருவாளை சொருகிக்கொண்டு , காது வரை மீசை வைத்துக்கொண்டு சுமோ காரில் வலம்  வருவது என எந்த வில்லன் அடையாளமும் இல்லாமல் சில பல ரியாக்ஷங்களிலேயே பயமுறுத்துகிறார் வித்யுத் . எதிர்காலத்தில் நமது எல்லா சூப்பர் ஸ்டார்களுக்கும் குடைச்சல் கொடுக்கப்போகிறார் என்பது மட்டும் உறுதி .
                                வில்லனை பிடிக்க போரில் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களை துணைக்கு அழைக்கிறார் , ஆனா அது ஏன்னு தான் புரியல . வழக்கமான ஹீரோ போல் வில்லனை உசுப்பேற்றி சண்டை போடும் அந்த காட்சி மட்டும் படத்திற்கு திருஷ்ட்டிப்பொட்டு .
                                  பாதை தவறி போய்க்கொண்டிருந்த விஜய்க்கு நண்பன் ஒரு யு  
டர்ன் மட்டுமே . துப்பாக்கி தான் நிஜமான விஜய் ரிட்டர்ன்ஸ் .