Tuesday 4 April 2017

சத்திய சோதனை







கடந்த ஜனவரி 30 அன்று நண்பர் கருந்தேள் ராஜேஷின் ஒரு பதிவை மிகவும் ஆர்வத்துடன் படித்துக்கொண்டிருந்தேன். சிறு வயதில் அவர் எப்படி தத்தியாக இருந்தார் அதன் பின் எவ்வாறு தன்னை மாற்றி கொண்டார் என்பதை பற்றின பதிவே அது . படிக்க படிக்க விறுவிறுவென இருந்தது, ஏனெனில் நீண்ட நாட்களாக தேளை தொடர்ந்து வாசித்து வருகிறேன் . அவரது புரிதல், maturity , genius ஐ பார்த்து மிகவும் வியந்துள்ளேன் . அப்படிப்பட்ட ஒருவர் மிகவும் தத்தியாக இருந்து மூன்றே வருடங்களில் தன்னை மாற்றிக்கொண்டார் என சொன்னபோது தொற்றிக்கொண்ட ஆர்வமே . தொடர்ந்து அந்த மாற்றத்திற்கு காரணம் ஒரு புத்தகம் என்றும் குறிப்பிட மனதிற்குள் என்ன புத்தகமாக இருக்குமென ஓடிக்கொண்டிருந்தது . இறுதியில் அந்த புத்தகத்தின் பெயரை அறிந்த பொது ஆச்சிரியம் இருமடங்கானது.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களின் சுயசரிதையான சத்திய சோதனையே அது. அவ்வளவு காலம் யார் மீது மிகுந்த விமர்சனங்கள் வைத்தோமோ  அவருடைய சுய சரிதை தான் எனக்கு மிகவும் பிடித்த ஒரு ஆளுமையை மாற்றியிருக்கிறது என்று தெரிந்ததுமே முதல் வேலையாக அமேசானில் ஆர்டர் செய்தென். காந்தி பிறந்த மண்ணான குஜராத் அகமதாபாத்தில் இருந்து அந்த புத்தகம் ஷிப் ஆகி வருவதை ட்ராக் செய்வதே உற்ச்சாகமான அனுபவமாக இருந்தது (கொஞ்சம் ஓவரா தெரியுதோ :D)

புத்தகம் கிடைத்தவுடனே அப்போது வாசித்துக்கொண்டிருந்த விநாயக முருகனின் வலம் நாவலை  கிடப்பில் போட்டுவிட்டு இதை துவங்கினேன். 

நிச்சயமாக நண்பர்களே... அனைவரும் இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் . அதிலும் பெரியார் அபிமானிகள் இதை விருப்பு வெறுப்பின்றி படித்தே ஆக வேண்டும் . ஏனெனில் நான் பெரியார் சிந்தனை பள்ளியை சேர்ந்தவன் . அதனாலேயே பெரியார் அபிமானிகள்  விருப்பு வெறுப்பின்றி படிக்க வேண்டும் என்று சொல்கிறேன் . 

நாம் அனைவருக்குமே காந்தி மீது ஒரு சிறிய வெறுப்பு இருக்கும் . அல்லது காந்தியை குறை கூறுவதை ஸ்டைல் statement ஆக வைத்திருப்போம் . காந்திதிக்கு இருந்த , அல்லது இருந்ததாக கேள்விப்பட்ட பிற்போக்கு சிந்தனைகள் மீதான ஒவ்வாமையே அதற்க்கு காரணமாக இருக்கும். அவரது சுய சரிதையை வாசிக்கும்போது இந்த பிம்பங்கள் நிச்சயமாக உடையும் . நிச்சயமாக அவரும் நம் பெரியாருக்கு நிகரான ஒரு ஆளுமையே . பெரியார் ஒரு superman என்றால் காந்தி ஒரு batman . சூப்பர்மேன் நார்மல் மனிதன் கிடையாது . இயல்பிலேயே superhumen சக்திகள் கொண்டவன், அதுபோல் பெரியார் பிறப்பிலேயே ஒரு ஆல்பா . ஒரு மிக உறுதியான கருத்தாளனாக , சமூக போராளியாக மாறுவதற்கு முன்பே அசாதாரணமான குணநலன்களை கொண்டிருந்தவர். எந்தவிதமான சமூக கட்டுகளுக்கும் மாஸ் ஹிஸ்டிரியாவுக்கும் தன்னை உட்படுத்திக்கொள்ளாதவர். அவரது பால்ய காலத்தை பற்றி வாசிக்கும்போது ஒரு 'என்னமோ போடா மாதவா' attitude  காணக்கிடைக்கும் . புத்தரும் கவுண்டமணியும் சேர்ந்த கலவை பெரியார். be  like bro வின் thug life போன்றது அவரது வாழ்க்கை.

ஆனால் ஒரு சாதாரண மனிதன் பெரியாராக முடியுமா? மிகவும் கடினம். ஒருவன் பெரியார் சிந்தனை பள்ளியின் மாணவன் ஆகலாம் . புத்தரின் சீடர்கள் மீண்டும் லைகீக வாழ்க்கைக்குள் திரும்பிய பின் எப்படி வாழ்ந்திருப்பார்களோ அது போல் பெரியார் அபிமானிகளால் வாழமுடியும். ஆனால் அந்த சீடர்கள் எப்படி புத்தரில்லையோ அது போலவே நாமும் பெரியார் ஆக  முடியாது.

இங்கு தான் காந்தியின் ஆளுமை முக்கியமாதாகிறது . காந்தி இயல்பில் ஒரு ஆல்பா அல்ல. அவர் முழுக்க முழுக்க self  made personality . ப்ருஸ் வெய்ன் பேட்மேன் ஆனது போல் கடும் முயற்சிகள் மேற்கொண்டு காந்தி மகாத்மா ஆகிறார். 

சிறு வயதில் காந்தி ஒரு பயங்காளி . கூட்டத்தில் பேசுவதென்றால் பயம். பெரியவர் பேச்சை ஏன் எதற்க்கென்று கேள்வி கேக்காமல் அப்படியே கடைபிடிக்கும் பழக்கமுடையவர் (இந்த இடத்தில் நமது பகுத்தறிவு பகலவன் தன் சித்தி வீட்டில் அடித்த லூட்டிகளை ஒப்பிட்டு பாருங்கள்  ). மனைவியை சந்தேகித்து torture செயகிறார். செக்ஸ் ஐ enjoy செய்வதில் குற்றவுணர்வு கொள்கிறார். ஆனால் ஏதோ ஒரு தேடல் மட்டும் அவருக்குள் இருக்கிறது. எவ்வளவு நகைப்புக்கு உள்ளானாலும் சரி, தனது செயல்களை தொடர்ந்து ஒரு சோதனைக்கு உள்ளாக்கிக்கொண்டே இருக்கிறார். தனக்கு நேரும் ஒவ்வொரு அனுபவத்தையும் கூர்ந்து கவனிக்கிறார். அதற்கான பிரதிவினையை ஆராய்கிறார் . தனது மனமும் அறிவும் எதை சரி என்று சொல்கிறதோ அதற்க்கேற்றவாறு பிரதிவினைகளை மாற்றிக்கொள்கிறார். இந்த குணாதிசயம் தொடர தொடர சொந்தமாக முன்னெடுப்புகள் எடுக்கவும் தொடங்குகிறார். முன்னெடுப்புகள் தோல்வி அடையும் போதும் நாம் சாதாரண மனிதர்கள் செய்வது போல அலுத்துக்கொள்ளவும் செய்கிறார். வாழ்க்கையையே ஒரு ட்ரையல் அண்ட் எர்ரர் ஆக வாழ்கிறார். 

காந்தியின் இந்த சமவயதை பெரியாருடன் ஒப்பிட்டு பார்த்தால் பெரியாருக்கு இது போன்ற பிரக்ஞ்சைகள் எதுவுமே இருக்காது. மனம் போன போக்கில் வாழ்க்கையை ஜாலியாக கழித்துக்கொண்டிருப்பார். காந்திக்கு தனக்குள் நிகழும் ஒவ்வொரு மாற்றமும் தெரிந்திருக்கிறது . மிக கவனமாக வெற்றியையும் தோல்வியையும் ஒரே மனதுடன் எதிகொள்கிறார். 

நமது ஆளுமையை  மாற்றவேண்டும் என்று பிரயத்தனப்படும் அனைவருக்குமே , தனது சக்த்திக்கு மீறிய விஷயங்களை கையாள்வதில் ஒரு மனப்போராட்டம் இருக்கும் . வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கையும் விடா முயற்சியால் வாழ்வின் போக்கை மாற்ற முயலும் மனப்பாங்கையும் சரியாக balance செய்யும்போதே ஒரு மனிதன் ஆல்பாவாக , தலைவனாக , ஆளுமையாக மாற முடியும். இந்த இடத்திலேயே ஒரு சாதாரண மனிதனுக்கு காந்தி முன்னுதாரணமாகிறார். நாங்கள் உங்களை எவ்வளவு தாழ்வாக நினைத்துக்கொண்டிருந்தாலும் சரி, காந்தியால் மகாத்மாவாக முடியுமென்றால் உங்களாலும் உங்கள் ஆளுமையை மாற்றிக்கொள்ள முடியும் . இதை ஒரு துளி கூட அவரை தரம் தாழ்த்தி சொல்லவில்லை, நம்மை போன்ற ஒரு சகமனிதரின் பயணத்தை வியந்து பார்த்து சொல்கிறேன் . 

சுய முன்னேற்ற நூல்களை படித்து அதன்படி மாற முயற்சித்துக்கொண்டு இருப்பவர்கள் அனைவரும் காந்தியை படியுங்கள். நாம் இப்போது முயல்வதை அந்த மனிதர் 130 ஆண்டுகளுக்கு முன்பே செய்து வெற்றி கண்டிருக்கிறார். அவர் நம்மில் ஒருவர். நமது சகபயணி , தொடர்ச்சியான முயற்சிகளுக்கு என்றுமே பலன் கிடைக்காமல் போகாதென்பதை நம் காதுகளில்  அவர் சொல்லிக்கொண்டே இருக்கிறார். 

பின்குறிப்பு : ராஜ்குமார் ஹிரானியின் லகே ரஹோ முன்னாபாய் படத்தை பார்க்கவில்லையென்றால் உடனே பாருங்கள். அந்த படத்தில் காந்தியை தீவிரமாக வாசிக்கும் சஞ்சய் தத்துடன் காந்தி வந்து உட்காந்துக்கொள்வார். நண்பனாக வழிகாட்டியாக வருவார். சத்திய சோதனை படித்த பின்பு நம்மாலும் அந்த அனுபவத்தை உணர முடியும் 

No comments:

Post a Comment