Wednesday 10 July 2013

LET SINGAM DANCE....


சிங்கம் 2 - துரை சிங்கத்தின் கடல் வேட்டை . . .
          மயில் வாகனம் மிஷனுக்கு பிறகு தூத்துக்குடியில் கடல் வில்லன்களை அழிக்கும் சிங்கத்தின் கதை. படத்தின் கதை சிங்கம் க்ளைமக்சிலேயே சொல்லி விட்டார்கள். தூத்துக்குடி கடற்கரை வழியாக நடக்கும் சட்ட விரோத செயல்களை பள்ளி ஆசிரியர் ஆக இருந்து கண்காணிக்கிறார் துரை சிங்கம் . சரியான நேரத்தில் போலிஸ் வேலைக்கு திரும்பி லோக்கல் மற்றும் ஆப்பிரிக்க வில்லன்களை பிடிக்கிறார்.
           படம் முழுவதும் வியாபித்து தெரியும் ஒரே பெயர் ஹரி ஹரி ஹரி. எனவே மற்ற விஷயங்களை பார்த்து விட்டு இயக்குனரிடம் வருவோம் .
           ஹாட் டிரிக் தோல்வியை சந்தித்து விட கூடாது என்பதற்கான சூர்யாவின் உழைப்பு படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது . துரை சிங்கம் கதாபாத்திரத்தில் சிவாஜி , கமல், விக்ரம் போன்ற "எதையும் நடிக்கும் இதயங்களை " கூட இனி நினைத்து பார்க்க முடியாது . அந்த அளவுக்கு சூர்யா பொருந்தி உள்ளார் அல்லது தன்னை பொருத்தி கொண்டு உள்ளார் . நடனத்திலும் பெரிய முன்னேற்றம் .  மாஸ் ஹீரோ கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கும் எவ்வளவு உழைப்பை கொட்ட வேண்டும் என்பதற்கு சூர்யா ஒரு உதாரணம் .
           அனுஷ்காவுக்கு பெரிய வேலை எதுவும் இல்லாவிட்டாலும் அழகாக இருக்கிறார். அம்சமாக நடிக்கிறார், அருமையாக ஆடுகிறார். அனுஷ்கா இருக்கும்போதே கதையை நகர்த்துவதிலும் ரசிகர்களை ஈர்ப்பதும் ஹன்சிகா தான்.
            ஒன்றிற்கு மூன்று வில்லன்கள் இருந்தும் யாருமே மயில் வாகனம் அளவிற்கு மனதில் பதியவில்லை
             இனி இயக்குனரை பற்றி . . . . . . .
             சூர்யாவின் ஸ்டார் வேல்யு , சிங்கத்தின் வெற்றி என எதையுமே மனதில் கொள்ளாமல் திரைக்கதையை செதுக்குவதில் பெரும் உழைப்பை கொட்டியிருக்கிறார் ஹரி. அதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல...
              சிங்கம் 2வையும் சிங்கத்தையும் இணைத்துள்ள விதம் பாராட்ட தக்கது . சிங்கம் படம் பார்த்த எந்த ரசிகனுக்கும் படத்தின் முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை தன்னை படத்தோடு தொடர்பு படுத்தி கொள்வதில் எந்த சிக்கலும் இருக்காது . கதாபாத்திரங்களின்  தன்மைக்கு எந்த மாற்றமும் இல்லை. சூர்யா தன மேலதிகாரியிடம் கோபப்படும் இடம் சிங்கத்தில் நிழல்கள் ரவியிடம் கோபப்படும் காட்சியின் நீட்சியே. துரைசிங்கம் கதாபாத்திரத்திற்கு போலீஸ் வேலை மீது உள்ள மரியாதையும் எவருக்கும் அஞ்சாத தன்மையும் இந்த இரு காட்சிகளிலும் ஒரே போல வெளிப்பட்டிருக்கும் .
             ராதா ரவிக்கு இருக்கும் கோபம் , அனுஷ்கா அம்மாவின் லூசுத்தனம், தியாகு நடித்திருக்கும் ஹார்பர் சண்முகம் கேரக்ட்டர் முதலியவை முதல் பாகத்தில் இருந்து கோர்வையாக தொடரப்பட்டிருக்கும் . இது போக புதிதாக ஹன்சிகா, சந்தானம், நான்கு வில்லன்கள் , மன்சூர் அலிகான் என பல நடிகர்கள் இருந்தாலும் எவருமே கதையில் திணிக்கப்படவில்லை . முக்கியமாக ஹன்சிகா ரசிகர்களை கவருவதன காரணம்  அவருடைய பாத்திர படைப்பு தான் . ( கவனிக்க : சந்தானம் கதாபாத்திரம் திணிக்க பட்டிருப்பது போல் தோன்றலாம் . ஆனால் நன்றாக பார்த்தால் , சிங்கம் படம் பார்க்காத ரசிகர்களுக்கு கதையை புரிய வைக்க ஹரி உபயோக படுத்தி இருக்கும் உத்தி இது என புரியும் . அப்படியிருக்கையில் சூர்யா போலீஸ் வேலைக்கு திரும்பிய பின் அந்த  கதாபாத்திரத்திற்கு வேலை இல்லாமல் போய் விடும் . எனவே தான் சூர்யா போலீஸ் வேலைக்கு திரும்பிய பின் விவேக் காமெடியை குறைத்து சந்தானம் காமெடியை அதிகபடுத்தி இருக்கிறார் ஹரி. )
           பிரியன் ஒளிப்பதிவு படத்திற்கு ஆகா பெரிய பலம் . பாடல்களும் படமாக்கப்பட்ட விதமும் அருமை. வேட்டி சட்டை, மழை இரவு , தெரு விளக்கு வெளிச்சம் என அமைந்து இருக்கும் சண்டைக்காட்சி அபாரம்.
           இரண்டாம் பாதியின் நடுப்பகுதிகளில் திரைக்கதையில் ஏற்பட்டுள்ள தொய்வால் கொட்டாவி வருகிறது . ஆனால் கொஞ்சம் நேரத்திலேயே அதை சரி செய்து பழைய வேகத்தை மீட்டு எடுக்கிறார் ஹரி. நான்கு வில்லன்களில் யாருமே சிங்கம் மயில் வாகனத்திற்கு ஈடாகவில்லை . அதிலும் அந்த பாய் வில்லன் ஊஹூம். . . படத்தின் நீளம் சற்றே அதிகம் என்று தோன்றுகிறது , அதாவது முதல் பாதி கொஞ்ச நேரமும்  இரண்டாம் பாதி அதீதீதீ . . .. . .க நேரமும் எடுப்பது போல் தோன்றுகிறது.
            என்னதான் இருந்தாலும் எனக்கென்னவோ தமிழ் சினிமாவில் வந்த பெஸ்ட் சீக்வல் படம் சிங்கம் 2 தான் என்று தோன்றுகிறது . ரசிகனின் நேரத்தையும் பணத்தையும் மதிக்கும் எண்டர்டெய்னர் படைத்திருக்கும் ஹரி படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் . 

No comments:

Post a Comment